தேர்தல் ஆணையாளர் – சபாநாயகர் அவசர கோரிக்கை!
Saturday, February 17th, 2018
தேவையேற்பட்டால் சில உள்ளூராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவ எல்லை தொடர்பில் சில சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய , சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் சபாநாயகரை சந்தித்த போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அதேபோல் , எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள அரசியலமைப்பு சபைக்கு இது தொடர்பில் அறிவிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் சபாநாயகரிடம் கோரியுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் குறிப்பட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய அறிக்கையொன்றை அனுப்பி வைக்குமாறு சபாநாயகர் இதன்போது தேர்தல் ஆணையாளரிடம் தெரிவித்துள்ளார்.
Related posts:
வித்தியா கொலை வழக்கின் சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு!
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறினால் தேசத்துரோக் குற்றம் - எவ்வித கருணையும் காட்டப்படாது என கடும் எச்...
எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் 22 பேர் இலங்கை கடற்படையால் கைது!
|
|