தேர்தல் ஆணைக்குழு தலையீடு: ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க தீர்மானம்!

கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது.
இந்த கொடுப்பனவு வழங்கல் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதாக உள்ளதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அரசுக்கு எழுத்துமூலம் அறிவித்ததையடுத்து இந்த தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
முன்னதாக இந்த கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்திருந்தது. இந்நிலையில் 5000 ரூபாய் வழங்கும் திட்டத்தில் இருந்து பிரதேச மற்றும் கிராமிய அரசியல்வாதிகளை ஒதுக்கி வைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
அதில் கொடுப்பனவுகளை வழங்குவதாயின் ஊடாக எந்தவொரு அரசியல் கட்சியினதோ அல்லது வேட்பாளரினதோ பிரசாரத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டாம் என கோரப்பட்டுள்ளது
அத்துடன் தற்போது மக்கள் தமது அன்றாட செயற்பாடுகளை முன்னெடுக்க இடமளிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதத்திற்கு குறித்த கொடுப்பனவினை வழங்கவேண்டுமா என சிந்திக்குமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கோரியிருந்த நிலையிலேயே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|