தேர்தல்கள் தொடர்பில் சபாநாயகர் – தோ்தல் ஆணையாளர் சந்திப்பு!

மாகாண சபைத் தேர்தல்களை சரியான முறையில் நடத்துவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று மாலை நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறவுள்ளது.
இதன் போது உரிய திகதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் ஒன்றை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் தருமாறும் தேர்தல்களை தொடர்ந்தும் பிற்போடுவது சட்டவிரோதம் என்றும் அவர் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
கலால் திணக்களத்தின் வருமானம் 400% உயர்வு!
எம்.ஜி.ஆரின் நினைவுதினம் திட்டமிட்டவகையில் இடைநிறுத்தம் – ஏற்பாட்டாளர்கள் வருத்தம்!
உயிரிழந்தவர்களை தகனம் செய்வது தொடர்பான பிரச்சினை குறித்து ஆராய எந்த குழுவும் நியமிக்கப்படவில்லை – அ...
|
|