தேர்தல்கள் செயலகம் நள்ளிரவு வரை திறந்திருக்கும்!
Wednesday, September 28th, 2016
வாக்காளர் திருத்தம் தொடர்பான மேன்முறையீடுகளை மேற்கொள்ள இன்று நள்ளிரவு 12.00 மணிவரை தேர்தல்கள் செயலகம் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்புகளில் தமது பெயர்களை பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது. இதனால் தமது பெயர்களை பதிவு செய்யாத வாக்காளர்கள் இன்றைய தினத்திற்குள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2016ம் ஆண்டு வாக்களார்கள் தமது பெயர் பட்டியலில் உள்ளதா என தெரிந்து கொள்ள அருகிலுள்ள கிராம சேவகர் காரியலாயம் அல்லது பிரதேச செயலாளர் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள காட்சிப்படுத்தப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலை பார்க்க முடியும்.
அல்லது http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.aspx என்ற இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் உங்கள் விபரங்களை அறியலாம்.
Related posts:
|
|