தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய செய்தி!

Monday, March 16th, 2020

இன்று அரசாங்க விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாடாளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணங்கள் மற்றும் வேட்மனுக்கள் ஆகியவை பொறுப்பேற்கப்பட மாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எனவே இதற்கு முன்னரான அறிவித்தலுக்கு அமைய மார்ச் மாதம் 17 மற்றும் 18 ஆம் திகதிகளிகளில் அலுவலக நேரத்திற்குள்ளும், மார்ச் 19 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனுக்கள் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

அத்துடன் அஞ்சல் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் மார்ச் மாதம் 17 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை ஏற்றுக்கொள்வதற்கான பணிப்புரை அனைத்து தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் பிரதி அல்லது உதவி தேர்தல்கள் ஆணையாளர்களுக்கும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் மார்ச் 19 ஆம் திகதி வேட்புமனுக்கள் மற்றும் ஆட்சேபனை தொடர்பான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படவுள்ளது.

பின்னர் நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்திற்கு அமைய தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வாக்களிப்புக்கான அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: