தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல்!

Wednesday, August 2nd, 2017

2017 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் செப்டெம்பர் 30 ஆம் திகதி உறுதிப்டுத்தப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.முஹம்மட்  தெரிவித்துள்ளார்.

கிராமசேவை உத்தியோகத்தர்கள் தமது அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் வாக்காளர் (தேருநர்) பட்டியலை இந்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்ட வாக்களர் தேருநர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும், நகர தேர்தல் அலுவலகத்திலும் ஒப்படைக்க முடியும்.மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலங்கள், கிராமசேவையாளர் அலுவலகங்கள், உள்ளுராட்சி மன்றங்கள் அலுவலகங்கள் ஆகியவற்றில் இந்த மாதம் 10 ஆம் திகதி முதல் வாக்காளர் இடாப்பு காட்சிப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்காளர் இடாப்பில் பொருத்தமற்ற பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்குமாயின் அது குறித்த ஆட்சேபனையை அடுத்த மாதம் 10 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 8 ஆம் திகதி வரை தெரிவிக்க முடியும்.தமது பெயர், வாக்களர் இடாப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லையாயின் குறித்த அந்த காலப்பகுதியில் அதனை மீள்பதிவு செய்து கொள்ள முடியும்.

மேலும், அது தொடர்பான விண்ணப்பங்களை குறித்த அலுவலகங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் முஹமட்ட தெரிவித்துள்ளார்.

Related posts: