தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுடன் அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

Wednesday, November 29th, 2017

உள்ளூராட்சி தேர்தல்கள் தொடர்பில் அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் நாளை(30) சந்திப்பொன்றுநடைபெறவுள்ளது.

இதனைத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். தற்போது உத்தேசிக்கப்பட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை நடத்துவது மற்றும் அது தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகள்குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேசமயம் தேர்தல் ஆணைக்குழுவும் நாளையதினம் கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளது. தேர்தல்கள் நடத்தப்படவுள்ள 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான மூன்றாவது நாள் இன்றாகும்.

Related posts: