தேர்தல்கள் ஆணைக்குழு – அஞ்சல் திணைக்களம் இடையே விசேட கலந்துரையாடல்!
Tuesday, October 1st, 2024தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் அஞ்சல் திணைக்களத்திற்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
அஞ்சல் வாக்கு பாதுகாப்பு பொதியைக் கையாளும் முறைமை, மற்றும் அதற்குரிய காலப்பகுதி என்பன இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளது.
அத்துடன் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை, வாக்காளர்களின் வீடுகளுக்கு விநியோகிக்கும் வழிமுறைகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அஞ்சல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலின் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக 10 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டுத் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக 7 இலட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
செக் குடியரசின் அதிபர் இலங்கை வருகை!
இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நோக்கில் தேசிய நல்லிணக்க வாரம்!
23ஆம் திகதி தொடக்கம் வாக்காளர் பட்டியல் காட்சிக்கு!
|
|
20 ஆவது சீர்திருத்தத்தில் தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் வகையில் கலப்பு தேர்தல் முறை உருவாக்கப்படும்...
ஒக்டோபர் முதல் வாரத்தில் 26 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை - சுற்றுலா அப...
தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலை சீருடை மற்றும் பாடப்புத்தங...