தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வ அறிவிப்பு!

Wednesday, March 4th, 2020

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுன கூட்டணி, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கீழ் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் சட்டத்திற்கு அமைய, பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியானது, தேர்தலில் போட்டியிடுவதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வதாக அறிவிக்க வேண்டும்.

இதற்கமைய, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரான சட்டத்தரணி சாகர காரியவசத்தினால் குறித்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.

Related posts: