தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு!

வாக்காளர்களுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளில் பெயர் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கம் என்பன தொடர்பில் முரண்பாடுகள் இருப்பின் அது குறித்துஉடனடியாக அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
கிராம சேவை அதிகாரிக்கோ அல்லது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திற்கோ இது தொடர்பில் எழுத்து மூலமாகவோ அல்லது தொலைபேசி ஊடாகவோ அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்குரிய வாக்காளர் அட்டை தபால் மூலம் கிடைக்காதவர்கள் தமது பிரதேச தகவல் நிலையத்திற்குச் சென்று அதனைப்பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
ரஷ்யப் போர்க்கப்பல் கொள்வனவு மோசமான விளைவை ஏற்படுத்தும்
யாழ் மாநகர பிரச்சினைக்கு உலக வங்கியின் உதவியுடன் தீர்வு!
இணுவில் விபத்து - சிறுவன் பலி : பொலிஸ் அதிகாரி கைது!
|
|