தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கோரிக்கை!

Thursday, November 30th, 2017

வாக்காளர் பெயர் பட்டியலில் தகுதியற்றவர்களின் பெயர்கள் இருப்பின் அதுதொடர்பாக அடுத்த மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் மாவட்டதெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு எழுத்துமூலம் தெரியப்படுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் கையொப்பமிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளூராட்சித் தொகுதிக்கான பட்டியலில் வாக்காளர்களின் பெயர் உரிய வகையில்உள்ளடக்கப்பட்டிருக்காவிடினும் அது குறித்தும் எழுத்தும்மூலம் முறைப்பாடு செய்ய முடியும்.

93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் 2017ம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலின் அடிப்படையில் இடம்பெறவுள்ளது. இந்தவாக்காளர் பெயர் பட்டியல் தேர்தல் நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது.

Related posts:

கொரோனா தொற்றை தேசிய பொறுப்பாக கருதி உதவுங்கள் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களிடம் கோரிக்கை!
வடக்கில் இன்றுமுதல் கள் விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி - பனை அபிவிருத்தி சபையின் தலைவர் கிரிசாந்த ...
பேரிடர்களிலிருந்து பாதுகாக்க கோரி கல்லுண்டாய் குடியிருப்பு மக்கள் மாவட்டம் செயலகம் முன்பாக கவனயீர்ப...