தேர்தலை பிற்போடக்கோரும் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

Thursday, February 23rd, 2023

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடத்தப்படுவதை தடுக்கும் வகையிலான நீதிப்பேராணையை பிறப்பிக்குமாறு கோரி ஓய்வுப் பெற்ற இராணுவ கேர்ணல் டப்ளிவ் எம்.ஆர் விஜேசுந்தர தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று உயர்நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளது.

இந்த மனு கடந்த 20 ஆம் திகதி எஸ் துரைராஜா மற்றும் சிரான் குணரத்ன உள்ளிட்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டது.

இன்றைய தினத்திற்கு முன்னதாக அந்த மனுவை ஆராய்வது அவசியமற்றது என மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தினர்.

இதன்படி, மனுவை ஆராய்வதற்காக முன்னர் திகதி குறிப்பிட்டப்படி இன்றையதினமே அழைக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்தது.

நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் இந்த சந்தர்ப்பத்தில் உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவதால் மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்படப்போவதில்லை என சுட்டிக்காட்டும் மனுதாரர், தேர்தலை பிற்போடும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் அங்கத்தவர்கள் உள்ளிட்ட 9 பேர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: