தேர்தலை நடத்துவது குறித்த சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விஷட கலந்துரையாடல்!

நாடாளுமன்ற தேர்தலின்போது மேற்கொள்ளப்பட்ட வேண்டிய ஒழுங்குவிதிகளை தரவுப்படுத்தும் முகமாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை முழுமையாக ஒழிக்கும் காலம்வரை காத்திருக்காமல் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் இந்த கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலேயே தேர்தலை நடத்தவேண்டுமானால் ஜூன் 20 என்ற திகதியில் நடத்தவேண்டியதில்லை. எனினும் உகந்த திகதி ஒன்றில் தேர்தலை நடத்தும்போது மேற்கொள்ள வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பிலேயே கலந்துரையாடப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Related posts:
தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கோரிக்கை!
வாகனங்களை இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் - திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!
கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க அமைச்சு முடிவு - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெர...
|
|