தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் – மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என அமைச்சர் நாமல் தெரிவிப்பு!
Wednesday, October 13th, 2021மாகாணசபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு எமது கட்சி தயாராகவே இருக்கின்றது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்-
இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும், மாகாணசபைத் தேர்தலுக்குமிடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்று சுட்டிக்காட்டியிருந்த நாமல் ராஜபக்ச தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச நாமும் தயாராகவே இருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்த தீர்மானம்!
ஐந்து மாதங்கள் - மீண்டும் அதிகாரக் குறைப்பு!
பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!
|
|