தேர்தலை திட்டமிட்ட வகையில் காலம் தாழ்த்த முயற்சிகள் – கபே குற்றச்சாட்டு!
Thursday, December 29th, 2016
எல்லை நிர்ணயச்சபையும், உள்ளுராட்சி மன்ற அமைச்சும் கூட்டாக இணைந்து வேண்டும் என்றே தேர்தலை நடத்தாமல் திட்டமிட்ட வகையில் மேலும் காலம் தாழ்த்த முயற்சிக்கப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு நிறுவனமான கபே தெரிவித்துள்ளது.
திட்டமிட்ட வகையில் தேர்தலை காலம் தாழ்த்தி வருவதாக கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எனவே இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புரைடய அனைத்து உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எல்லை நிர்ணய அறிக்கை நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட இருந்தபோதும் மொழிபெயர்ப்புப் பிரச்சினை காரணமாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலைக் காலம் தாழ்த்தும் நோக்கில் இவ்வாறு பல்வேறு காரணங்கள் காண்பிக்கப்படுகின்றன. என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.
Related posts:
|
|