தேர்தலை கண்காணிக்கவரும் வெளிநாட்டவர்களுக்கு இரண்டு வார கால தனிமைப்படுத்தல்

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்கு சர்வதேசக் கணிப்பாளர்கள் வழமை போல இம்முறையும் வருவார்கள். ஆனால் இரண்டு வாரகால தனிமைப்படுத்தல் விதிமுறையை அவர்கள் நிறைவு செய்து, கொரோனாத் தொற்று அற்றவர்கள் என்பதை நிரூபித்த பின்னரே அவர்கள் களத்தில் இறங்கித் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப் படுவார்கள் என ஜனாதிபதி – தேர்தல் ஆணையார்கள் இடையே நடைபெற்ற சந்திப்பில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த தடவை பொதுநலவாய அமைப்பு, ஐரோப்பிய ஒன்றியம், தென்கொரியாவின் அன்பிறில் அமைப்பு ஆகியவற்றின் சர்வதேசக் கண்காணிப்புப் பிரதிநிதிகள் இலங்கையில் தேர்தல்கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அவர்களில் கணிசமானோர் இம்முறையும் தேர்தல் கண்காணிப்பில் ஈடுபடத் தயாராக இருக்கின்றார்கள் என்று ஆணையாளர்கள் தரப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்குத் தெரிவிக்கப்பட்டது
Related posts:
|
|