‘தேர்தலை ஒத்திவைக்க வேண்டாம்’- மஹிந்த !

Friday, June 29th, 2018

மாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் ஒத்திவைக்க வேண்டாமென்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தினார்.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் சபாநாயகருக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் இடையில் நாடாளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார்.

கிழக்கு வடமத்தி மற்றும் சப்ரகமுவா மாகாணங்களின் காலம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்து ஒரு வருடமாகின்ற நிலையில் அம்மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது குறித்தும் மஹிந்த தேசப்பிரிய இதன்போது எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மத்தி வடமேல் மற்றும் வடக்கு மாகாணஙகளுக்கான காலமும் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடையவுள்ளதால் மகாணசபைத் தேர்தல்களை உடனடியான நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சபாநாயகரிடம் அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களை பழைய முறைமையின் கீழ் நடத்துவதாயின் தற்போதுள்ள தேர்தல் சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதோடு புதிய முறைமையில் அந்தத் தேர்தல்களை நடத்துவதாயின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாகாண எல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்விரு விடயங்களில் ஒன்றை நிறைவேற்றும் வரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவால் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: