தேர்தலைப் பின்தள்ளுவது ஜனநாயக விரோதச் செயல்- கூறுகிறார் மகிந்த தேசப்பிரிய!
Tuesday, January 10th, 2017உள்ளுராட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கின்றது. அதனைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எனக்கு வழங்கப்படவில்லை. உள்ளுராட்சி சபைத் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவது ஜனநாயகத்துக்கும் பொது வாக்குரிமைக்கும் விரோதமான செயல் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேர்தலைப் பிற்போடுவது தொடர்பில் எமது ஆணையகம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களும் விமர்சனங்களும் சில தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றன. தேர்தல் குறித்து நாடாளுமன்றத்துக்கே அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தின் ஊடாக சமந்தப்பட்ட அமைச்சரினால்தான் தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியும். சுயாதீன ஆணைக்குழு என்பதால் மட்டும் எமக்கு இந்த அதிகாரங்கள் கிடைத்து விடாது. இலங்கை மட்டுமின்றி ஏனைய நாடுகளிலும் இவ்வாறே இடம்பெறுகின்றன. அரசியல் கட்சிகள் போல எமக்கும் உள்ளுராட்சிச் சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதனைத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றார்.
Related posts:
|
|