தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!

Tuesday, June 23rd, 2020

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குகள் எண்ணும் ஒத்திகை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று காலை 9.30 மணியளவில் ஒத்திகை ஆரம்பமானது.

இந்த வாக்கு எண்ணும் ஒத்திகை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்,  கிளிநொச்சி மாவட்டச் செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறுகின்றது.

கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பொதுத் தேர்தல் வாக்குகளை எண்ணும் பணியை முன்னெடுப்பது தொடர்பில் அவதாகிக்கவே இந்த ஒத்திகை முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை, வாக்கெடுப்பு ஒத்திகை கடந்த வாரம் நாவந்துறை பாடசாலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை...
வெளிநாட்டுத் தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்கள் மூலம் 251 மில்லியன் ரூபா வருமானம் - வெகுசன...
சேவைகளைப் பெறுவதற்கு திகதி மற்றும் நேரத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது கட்டாயம் - மோட்டார் போக்கு...