தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – தேர்தல்கள் ஆணைக்கு அறிவிப்பு!

ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான சகல ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்கு தெரிவித்துள்ளது.
அத்துடன் தேர்தலுக்கான வாக்களிப்பு நாளைமறுதினம் 5 ஆம் திகதி காலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் 22 மாவட்டங்களில் அங்கிகரிக்கப்பட்ட 20 அரசியல் கட்சிகளும், 34 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடவுள்ளன. அவற்றில் 7 ஆயிரத்து 45 பேர் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
அத்துடன் குறித்த தேர்தலில் நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 12 ஆயித்து 984 வாக்களிப்பு நிலையங்களில் ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனாதிபதி இன்று ரஷ்யா விஜயம்!
வடமாகாணப் பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் லீவு விண்ணப்பங்களுக்கு அனுமதி
பண்டிகை காலத்தால் பாதுகாப்பை பலப்படுத்துங்கள் - பொலிஸாருக்கு பொதுப்பாதுகாப்பு அமைச்சர் அவசர உத்தரவு...
|
|