தேர்தலில் வெற்றிகாக அரசியல்வாதிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுகின்றனர் – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Monday, December 6th, 2021

நாட்டில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மக்களின் அடிப்படை உரிமைகளை சுரண்டுவதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இந்த செயற்பாட்டை நிறுத்தாமல் அரசியல்வாதிகளால் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் கூறியுள்ளார்.

மேலும் தான் உட்பட அனைத்து அரசியல்வாதிகளும் தேர்தலில் வெற்றி பெற மக்களிடம் தண்ணீர், வீதி மற்றும் மின்சாரம் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருவதாக கூறியே வாக்கு கேட்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு கேட்கும் யுகத்தை இல்லாமல் செய்தாலேயே புதியவர்களும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடலாம் என்றும் இதனை மாற்றுவதற்கு அரசாங்கம் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் எனவும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: