தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை: நவாஸ் ஷெரீப் அதிர்ச்சி!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான அரசியல் சாசன வழக்கில், அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச செய்தி வெளியிட்டுள்ளன.
பனாமா லீக்ஸ் விவகாரத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை குற்றவாளி என கடந்த வருடம் அறிவித்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து, தனது பதவியை இராஜினாமா செய்த அவர் அந்த வழக்கை மேல்முறையீடு செய்து சந்தித்து வருகிறார்.
இதனை அடுத்து, இது தொடர்பாக உயர் நீதிமன்றம் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரித்து வந்து தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை என இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் காலமானார்!
நுளம்பு கட்டுப்பாட்டுச் சட்டம், 16 வருடங்கள் கடந்தும் திருத்தப்படவில்லை - பொது சுகாதார பரிசோதகர்கள் ...
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் - மின்வலு மற்றும் எரிசக்...
|
|