தேயிலைத் தொழிற்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு – ஆசிய அபிவிருத்தி வங்கி!

Thursday, October 24th, 2019

2020ம் ஆண்டு இலங்கையின் தேயிலைத் தொழிற்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி தீர்மானித்துள்ளது.குறித்த வங்கியின் கடன்வழங்கல் திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக தேயிலை பிணையங்களின் விநியோகத்தின் ஊடாக, பெருந்தோட்ட யாக்கங்கள் தங்களுக்கு தேவையான நிதியைத் திரட்டிக் கொள்ளும் வேலைத்திட்டத்துடன் ஒத்துழைக்க ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டமிட்டிருந்தது.

எனினும் தற்போது இந்த திட்டம் மாற்றிக் கொள்ளப்பட்டிருப்பதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: