தேயிலைக்கொழுந்தின் விலை அதிகரிப்பு!

Monday, January 14th, 2019

தாழ் நில பிரதேச தேயிலைக்கொழுந்தின் விலை தற்போது அதிகரித்துள்ளதாக தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, ஒரு கிலோ கிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 108 ரூபா 25 சதமாக அதிகரித்துள்ளது என தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு கிலோகிராம் தேயிலைக் கொழுந்தின் விலை 72 ரூபாவாக காணப்பட்டது.

அத்துடன், கடந்த டிசம்பர் மாதமளவில் தேயிலைக் கொழுந்தின் விலை 102 ரூபாவாக காணப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: