தேயிலைக்கும் எனக்கும் தனிப்பட்ட தொடர்பு உண்டு –  இந்தியப் பிரதமர் மோடி!

Friday, May 12th, 2017

உலகின் மூன்றாவது மிகப்பெரிய தேயிலை ஏற்றுமதி செய்யும் நாடாக இலங்கை இருப்பதற்கு மலையக மக்களின் பங்களிப்பு முக்கியமானது என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஹட்டன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையை திறந்து வைத்து, தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதை தெரிவித்தார். மேலும் கூறுகையில்,

தேயிலை தொழிலில் இலங்கை வளர்ச்சியடைந்திருப்பதற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் மலையக தொழிலாளர்களாகிய நீங்களே எனவும் குறிப்பிட்டார்.

“உங்களுக்கும் எனக்கும் இடையே ஒரு பொதுவான ஒற்றுமை இருக்கின்றது. தேயிலைக்கும் எனக்கும் ஓர் தனிப்பட்ட தொடர்பு உண்டு. ‘சாய் பே சச்சா அல்லது தேனீருடனான கலந்துரையாடல்’ என்பது ஒரு சுலோகம் மட்டும் அல்ல உழைப்பின் மீதான மரியாதையை குறிக்கின்றது” எனவும் குறிப்பிட்டார்.

உலகின் மிகப் பழமையான செம்மொழியான தமிழ் மொழியையும், சிங்கள மொழியையும் சரலமாக பேசுகின்றீர்கள். இது பெருமைக்குரிய விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.

Related posts:


அம்பாறை மாவட்டத்தில் சேதனப் பசளை உற்பத்தி பயிற்சி - கமநல சேவைகள் உதவி ஆணையாளர் சம்பா தென்னக்கோன் தெர...
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை தொடர்பில் நாடாளுமன்றத்தில் மே 4 இல் விவாதம் - நாடாளுமன்ற ச...
ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை - இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் நாடா...