தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் ஆரம்பம் – மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு – புத்தசாசன அமைச்சு அறிவிப்பு!

தேசிய வெசாக் வாரம் இன்றுமுதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய வெசாக் நிகழ்வு ஹொரண கொனபல ஒலப்படுவ ரஜமகா விகாரையை மையப்படுத்தி நடைபெறவுள்ளது. எனினும் இதற்கு குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இன்றுமுதல் ஆரம்பமாகும் வெசாக் வாரத்தை முன்னிட்டு அனைத்து பௌத்த வீடுகளிலும் பெத்த கொடியை ஏற்றுமாறு அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிச்சந்ர தெரிவித்துள்ளார். இதேவேளை வெசாக் வலயங்கள், வெசாக் தோரணங்கள், தாகசாந்தி நிலையங்கள் மற்றும் உணவு வழங்கள் நடவடிக்கைகள் ஆகியன தடைசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் மக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவ்வமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அஞ்சத் தேவையில்லை – அமைச்சர் ராஜித சேனாரட்ன!
கிராமிய மக்களின் பொருளாதார வலுப்படுத்துதல் என்ற வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை!
கொரோனாவின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் – அமைச்சர் நாமல் வலியுறுத்து...
|
|