தேசிய வளங்களை விற்பது அரசின் நோக்கமல்ல – நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை அமைந்துள்ளது – அமைச்சர் நாமல் தெரிவிப்பு!

தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது என இலங்கை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
அரசாங்கம் அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படுகிறது. ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் அனைத்து நாடுகளுடனும் ஒன்றினைந்து செயற்படுகிறோம்.
இந்தியா, இலங்கைக்கு அயல்நாடு இரு நாட்டுக்குமிடையில் வரலாற்று ரீதியில் நல்லுறவு காணப்படுகிறது. அத்துடன் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் மத அடிப்படையில் நல்லுறவு காணப்படுகிறது.
இந்தியாவின் ஒத்துழைப்புடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தி பணிகள் காணப்படுகின்றன. அவற்றை இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பார்வையிடுவார்.
பல நாடுகளை சேர்ந்தோர் தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ளார்கள். அதேவேளை வருகைதந்து குறைகளை தேடி அலைபவர்களும் உள்ளார்கள். இவ்வாறான காரணத்திற்காக இவர் நாட்டுக்கு வரவில்லை.
இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும் வகையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது வருகை காணப்படுகிறது.
நாட்டின் சுயாதீனத் தன்மையை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் அனைத்து நாடுகளுடன் ஒன்றிணைந்து செயற்படும்.
எக்காரணிகளுக்காகவும் சுயாதீனத்தன்மையை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்பதுடன் தேசிய வளங்களை விற்கும் கொள்கை அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் அமைச்சர் நாமல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|