தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் கட்டமைப்பில் மாற்றம் – கோரிக்கை முன்வெக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Thursday, October 14th, 2021

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் செயற்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டுமாயின் அதன் கட்டமைப்பில் பல மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபையின் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கையில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிகார சபையில் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிமுதல் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரையில் இடம்பெற்ற நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இவ்வாறு ஐவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த குழுவின் இடைக்கால அறிக்கை கடந்த தினம் இராஜாங்க அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

குறித்த இடைக்கால அறிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: