தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டியில் இ.போ.ச. வட பிராந்தியம் சாதனை!

Monday, March 25th, 2019

இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டி (Master game)  மாத்தறையில் கடந்த 2019/03/23,24 திகதிகளில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் போக்குவரத்து சபை சார்பாக வட பிராந்தியத்திலிருந்து பங்கேற்ற புவி 5000M வேக நடைப்போட்டியில் 1 ஆம் இடம் பெற்று தங்க பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டார். மேலும் 10000M ஓட்டம், ஈட்டி எறிதல் ஆகிய நிகழ்வுகளில் முறையே 3 ஆம் மற்றும் 2 ஆம் இடங்களைப் புவி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டி  (Master game)  இலங்கை போக்குவரத்து சபை சார்பாக வட பிராந்தியத்திலிருந்து கி. புவி , ரி.ஜெயரூபன், ரி.சுதாஸ்கர், கே.துனேஸ், ஆர். சுதர்சன், எஸ்.சுஜிந்தன் பங்கு பற்றி 4 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம்  உட்பட 16 பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: