தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் ஆரம்பம்!

தேசிய போதைப் பொருள் ஒழிப்பு பாடசாலை வாரம் இன்று(21) ஆரம்பமாகி எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று(21) காலை 9 மணிக்கு முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை இன்று போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய மாணவர்களை தெளிவுபடுத்தும் வகுப்பறை செயலமர்வுகளும், நாளைய தினம் பெற்றோர்களை இணைத்து மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளும் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டங்களும் இடம்பெறவுள்ளன.
போதைப்பொருள் வியாபாரம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு செய்ய 1984 என்ற இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவித்தல் இன்று ஜனாதிபதியினால் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|