தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் – தலைவர் வைத்தியர் சச்சிந்ர கமகே அறிவிப்பு!

Sunday, August 15th, 2021

தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சச்சிந்ர கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் கொரேனா பரவல் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சேவைகள் வழங்கப்படுகின்றமையினால் நாளை 16 ஆம் திகதிமுதல் நுகேகொடை பிரதான காரியாலயம் மற்றும் வேரஹெர உள்ளிட்ட ஏனைய சகல கிளை காரியாலங்களுக்கும் 225 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணைய வழி ஊடாக முன்னதாக நேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நீதிமன்றங்களினால் அனுப்பப்படும் சாரதிகளுக்கான பரிசோதனைகள் வழமை போன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: