தேசிய பொலிஸ் ஆணைக்குழு 14 நாட்கள் அவகாசம் – அரசியல் அமைப்பு சபை!

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை, 14 தினங்களுக்குள் முழுமையாக தீர்த்துக் கொள்ளுமாறு அரசியல் அமைப்பு சபை அறிவுறுத்தியுள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினரும், பொலிஸ்மா அதிபரும் நேற்றைய தினம் அரசியலமைப்பு சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, இரு தரப்புக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட முரண்பாட்டு நிலை தொடர்பில் ஆராயப்பட்டது.
பொலிஸ் ஆணைக்குழு பிறப்பித்த 10 உத்தரவுகளை இதுவரை செயல்படுத்தாமை தொடர்பில் கருத்துப்பதிவுகளை மேற்கொள்வதற்காகவே, பொலிஸ் மா அதிபரும், பொலிஸ் ஆணைக்குழுவினரும் இன்று அரசியல் அமைப்பு சபையில் முன்னிலையாகியிருந்தனர்.
பிரச்சினையை தீர்த்துக் கொண்டு 14 தினங்களுக்குள் அரசியல் அமைப்பு சபைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இதன்போது பொலிஸ் ஆணைக்குழுவுக்கும், பொலிஸ்மா அதிபருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|