தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை – இராணுவ தளபதி !
Friday, August 16th, 2019தற்பொழுது நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று இராணுவ தளபதி லெப்டினன் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “எதிரியின் தன்மை மாறி இருப்பாகவும் அதனை எதிர்கொள்வதற்கு இராணுவம் தொடர்ந்தும் புதிய உத்திகளை கையாண்டு வருகின்றனர்.
வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் முறையாக தேவைக்கு அமைவாக பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் எந்தவித பிரச்சினையும் இல்லை.
கைது செய்யும் நடவடிக்கைகள் இன்று மட்டுமல்ல நாளையும் இடம்பெறக்கூடும். இந்த பயங்கரவாத வலைப்பின்னல் தொடர்பாக நாம் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம்.
இன்றும் சந்தேக நபர்கள் இருப்பார்களாயின் நாம் கைது செய்வோம். இதன் மூலம் உலகில் அதாவது உலக நாடுகளில் முழுமையாக பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை.
திட்டமிட்ட வகையில் சர்வதேச ரீதியில் வலைப்பின்னல் ஊடாக செயற்படும் குழுவே இருக்கின்றது. இதனால் நாம் இதற்கிடையிலேயே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பாதுகாப்பு குறித்து எந்தவித அச்சமும் கொள்ளத்தேவை இல்லை.
இதனால் நாம் எமது முழு வலுவையும் பயன்படுத்தி இதனை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஏப்ரல் 21ம் திகதி துரதிஸ்டமான இறுதி சம்பவங்கள் இடம் பெற்றது. இதனை தொடர்ந்து குறுகிய காலப்பகுதிக்குள் இராணுவம் வலுவடைந்துள்ளது.
இதனை எம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது, தொடர்ந்தும் நாம் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இராணுவம் அர்ப்பணிப்புடன் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதனால் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ளத்தேலையில்லை என்றும் அவர் தெரிவித்தார். இராணுவம் என்பது மக்களின் இராணுவம், இதனை நாம் முன்னரும் கூறியுள்ளோம்.
அது வடக்கிலும் தமிழ் மக்களுக்காகவும் இருக்கலாம். தெற்கில் உள்ள சிங்கள மக்களுக்காகவும் இருக்கலாம்.நாம் பொது மக்களின் இராணுவம். மக்களின் விருப்பு வெறுப்புக்களை நாம் அறிந்துகொள்வோம். இதற்கு அமைவாக நாம் செயற்படுவோம்.
சில குழுக்கள் அதாவது அரசியல் குழுக்கள் அல்லது வேறு சர்வதேச குழுவாகவும் இருக்கலாம். அவர்கள் செய்யும் செயற்பாடுகளுக்கு நாம் வளைந்து கொடுக்க தேவையில்லை. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என கூறியுள்ளார்.
Related posts:
|
|