தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினைகளும் இல்லை – அமைச்சர் தலதா அத்துகோரள!

சிலர் கூறுவது போல் தேசிய பாதுகாப்பு சம்பந்தமாக எந்த பிரச்சினைகளும் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி குருவிட்ட பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சிலர் கூறும் அளவுக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை. முன்னர் சாதாரண பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு ஒரு நபர் மட்டுமே இருந்தது.
தற்போது அதனை சம்பந்தப்பட்ட துறையினரால் முன்னெடுக்கப்படுகிறது. ஊழல் விசாரணைப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சம்பந்தமாக சிலர் இப்படி கூறியிருக்கலாம்.
குற்றச்சாட்டுக்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து எவரும் கவலைப்பட தேவையில்லை.
அரசாங்கம் என்ற வகையில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டின் பாதுகாப்பு தொடர்புக் கூற முடியும் எனவும் அமைச்சர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|