தேசிய பாதுகாப்பு சபையின் ஒன்றுகூடலின் பின் அவசரகால சட்டம் தொடர்பான இறுதி முடிவு!

Wednesday, March 14th, 2018

தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள அவசரகால சட்டத்தை நீக்குவது தொடர்பில் தேசிய பாதுகாப்பு சபையின் ஒன்றுகூடலின் பின்னரே தீர்மானிக்கப்படும் என்று சட்ட ஒழுங்குகள் அமைச்சர்ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து  கடந்த மார்ச் மாதம் 6ஆம் திகதி நாட்டில் அவசரகால சட்டம் ஜனாதிபதியால் அமுலாக்கப்பட்டது. மேலும் 10 நாட்களுக்கு மேல் இந்த சட்டத்தை நீடிப்பதாக இருப்பின் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: