தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான விஷேட விரிவுரை!
Friday, February 17th, 2017‘மாற்றமடையும் சீனாவும் – அமெரிக்க அதிகார சமநிலையும் மற்றும் இலங்கை, இந்தியா ஒத்துழைப்பில் ஜப்பான் நாட்டின் வகிபாகமும்’ எனும் தலைப்பிலான விஷேட விரிவுரை ஜப்பானிய கல்வியியலாளர் வைத்திய கலாநிதி சடோறு நாகோவினால் நடத்தப்பட்டது.
தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் தலைமையகமான பத்தரமுல்ல சுஹூறுபாய கேட்போர் கூடத்தில் நேற்று இந்த விஷேட விரிவுரை இடம்பெற்றது.
இந்த விரிவுரையானது மாற்றமடையும் பூகோள அரசியல் மற்றும் சமூகத்துறைகளில் தற்போதைய தேசிய, சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலை தொடர்பாக அறிவூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது இலங்கையானது இந்து – ஜப்பான் ஒத்துழைப்பில் எவ்வாறு மையப்படுத்தப்பட்டவேண்டும் என்பதாகவும் மற்றும் அமெரிக்க, சீனா நாடுகளுக்கிடையிலான அதிகார சமநிலையுடைய மாற்றமானது பூகோள அரசியல் சூழலில் இம்மூன்று நாடுகளின் வகிபங்கு எவ்வாறு அமைந்திருக்கவேண்டும் என்பது பற்றியும் தெளிவுபடுத்தினார். விரிவுரையின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில்களும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வினை முன்னிட்டு இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு அசங்க அபேகுனசேகர மற்றும் ஜப்பானிய கல்வியியலாளர் ஆகியோருக்கிடையில் ஞாபகார்த்த சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கல்வியியலாளர்கள், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், விஷேட அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையம் பாதுகாப்பு அமைச்சு சார்பில் தேசிய பாதுகாப்பு ஆய்வுகளை முன்னெடுக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்ட தேசிய சிந்தனைக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|