தேசிய பாடசாலைகளில் முறைகேடு – முறையிட அதிகாரி நியமனம்!

தேசிய பாடசாலைகளில் இடம்பெறும் மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்க அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது.
அதற்கமைய பெற்றோர்கள் பணம் சேகரித்தல், சுற்றுநிருபத்திற்கு முறைகேடாக பொருட்களை பெற்றுக் கொள்ளல் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அதிகாரியிடம் முறையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பாடசாலைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை கே.ஜீ.சீ.மஹேஷிகா, உதவிக் கல்விப் பணிப்பாளர், தேசிய பாடசாலைகள் கிளை, கல்வியமைச்சு, இசுருபாய, பத்தரமுல்லை எனும் விலாசத்திற்கு எழுத்து மூலம் அறியப்படுத்த முடியும் என குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சித்திரைப் புத்தாண்டின் சுப சுபநேரங்கள்!
மழையால் தத்தளிக்கும் மக்கள் விடயத்தில் கூட அக்கறையின்றி இருக்கிறது கூட்டமைப்பு - E.P.D.P யின் .யாழ்...
60 வயதிற்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ளவில்லை - உள்நா...
|
|