தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு விசேட சலுகை – கல்வி அமைச்சு!

Thursday, July 11th, 2019

கல்வி அமைச்சு விசேட தீர்மானமொன்று தொடர்பில் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசிய பாடசாலைகளில் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் அல்லது அதற்கு அதிக காலம் கடமையாற்றும் ஆசிரியர்கள் தமது பிள்ளைகளை அதே பாடசாலையில் சேர்த்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

தேசிய பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் அவர்களின் பிள்ளைகளை அதே பாடசாலைகளில் சேர்த்து கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts: