தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுங்கள் – அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

Monday, April 4th, 2022

தற்போது ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண ஒன்றிணையுமாறு, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.

பல்வேறு பொருளாதார மற்றும் உலகளாவிய காரணிகளால் தற்போதைய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் முன்னணி ஜனநாயக நாடுகளில் ஒன்றாக, ஜனநாயக கட்டமைப்பிற்குள்ளேயே இதற்கு தீர்வு காணப்பட  வேண்டி உள்ளது.

அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக, தேசிய தேவை எனக் கருதி ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது.  அதற்காக அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டு, தேசிய நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு ஒன்றிணையுமாறு, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: