தேசிய தாய்ப்பால் வாரம் நாளை முதல் ஆரம்பம் – சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவிப்பு!

Saturday, July 31st, 2021

தேசிய தாய்ப்பால் வாரம் நாளை ஆரம்பமாகவுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையில் தேசிய தாய்ப்பால் வாரம் அமுல்படுத்தப்படும் என அந்த பணியகம் அறிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதில் இலங்கை முன்னணி வகிக்கிறது. அதேவேளை, நாட்டில் 99 சதவீத தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கொரோனா தொற்று பரவல் காரணமாக சில தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்கு அச்சமடைவதாக குடும்ப நல சுகாதார பணியகம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட தாய்மார்களை போன்று, கொவிட்19 தொற்றுறுதியான தாய்மார்களும் தங்களது பிள்ளைகளுக்கு பாதுகாப்பான முறையில் தாய்ப்பால் வழங்க முடியும் என குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: