தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் மே 08 முதல் ஆரம்பம்!

Saturday, May 4th, 2019

எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையில் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இடம்பெறவுள்ளது.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக டெங்கு வாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், டெங்கு நுளம்புகள் பரவும் இடங்களை சுத்தம் செய்வதற்கு பொது மக்களை தெளிவுப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.

டெங்கு நுளம்புகள் பெருக் கூடிய இடங்கள் பல காணப்படுவதாகவும் இதனால் டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என சுகாதார மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

முப்படையினர் பொலிஸார் மற்றும் சுகாதார பணியாளர்கள் ஒன்றிணைந்து நுளம்புகள் பெருகும் இடங்களை கண்டறிவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

Related posts: