தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

Tuesday, October 24th, 2017

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அரசியல் அமைப்புக்காரணமாக நாட்டின் தேசிய சுகாதார சேவைக்கு ஆபத்து ஏற்படப் போவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்தக் கருத்தினை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்ட அவர் புதிய அரசியலமைப்பின் மூலம்அதிகாரங்களானது மாகாண அதிகாரிகளுக்குச் செல்வதால் தேசிய கொள்கையின் கீழ் உள்ள சிகிச்சைப்பணிகள் பாதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு பாதிப்புக்கான கொள்கைகள் கூட இதன் காரணமாக பாதிக்கப்படும் என்று ஹரித்த அலுத்கேசுட்டிக்காட்டியுள்ளார்.மேலும் ஏற்கனவே இலங்கையில் ஒழிக்கப்பட்டுள்ள போலியோஇ மலேரியா போன்ற நோய்களும் மீண்டும்பரவக்கூடிய சந்தர்ப்பம் உண்டு என்றும் அலுத்கே எச்சரித்துள்ளார்.

Related posts: