தேசிய சுகாதாரக் கொள்கை உருவாக்க அங்கீகாரம்!

Friday, July 21st, 2017

தேசிய சுகாதாரக் கொள்கைகள் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்  வழங்கியுள்ளது.

தற்போதுவரை 1996ஆம் ஆண்டு வரையப்பட்ட சுகாதாரக் கொள்கைகளே அமுலில் இருக்கின்ற நிலையில் குறித்த துறையில் ஏற்பட்ட மாற்றங்களை கருத்திற்கொண்டு புதிய கொள்கை உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகாதாரத்துறை சார்ந்த கல்விமான்கள், விற்பனர்கள் ஆகியோரது பங்களிப்புடன் சுகாதாரக் கொள்கையை வகுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நோயாளர்களின் உரிமைகளையும், சமூக நீதியையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் நோக்கமாகும். இதன் மூலம் சிறந்த சுகாதார சேவையை வழங்கக்கூடிய வாய்ப்பு உருவாகிறது. தனியார் சுகாதார சேவைகளுக்காக மக்கள் கூடுதலான பணத்தை செலவிடும் தேவையும் நீங்குகிறதென சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.இது தொடர்பான யோசனையை  சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய துறை அமைச்சர் ராஜித்த சேனாரட்ன அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்

Related posts: