தேசிய, சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு இலங்கையில் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Friday, March 5th, 2021

இந்த ஆண்டு இலங்கையில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகள் பல நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் தம்புள்ளயில் தேசிய இளைஞர் படையினர் நடத்திய சான்றிதழ் விழாவில் பங்கேற்றபோதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க சர்வதேச களம் இதன் மூலம் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: