தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைப்பு – அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, October 11th, 2020

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின், சமூக சேவை நடவடிக்கைகள், பட்டப்படிப்புக்கான பயிற்சி நெறிகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் நிலைமையை கருத்திற் கொண்டே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் காமினி அத்தனாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: