தேசிய சட்ட வாரம் ஆரம்பம்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வருடாந்தம் ஒழுங்கு செய்யும் தேசிய சட்ட வாரம் இன்று ஆரம்பமாகிறது.
சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்றுக்கான சட்டத்தரணிகள் சமூகம் என்ற தொனிப்பொருளின் கீழ் நாடளாவிய ரீதியில் இந்த வாரம் அமுற்படுத்தப்படும்.என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யூ.ஆர். டீ சில்வா தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு இலவசமாக சட்ட உதவியும் ஆலோசனைகளையும் வழங்குவதற்கும் கம்பனிச் சட்டம் தொடர்பான அறிவையும் விளக்கங்களையும் மக்கள் மத்தியில் விருத்தி செய்வதற்கும் இம்முறை தேசிய சட்ட வாரத்தில் எதிர்பார்க்கப்பட்டிருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கூறினார்.
தேசிய சட்ட வாரத்தின் பிரதான செயலமர்வு ஸ்ரீஜயவர்த்தனபுர கோட்டே மாநகர சபை முன்றலில் இடம்பெறும். இதற்கு இணைவாக மாத்தளை, யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, அனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், வவுனியா, கம்பஹா ஆகிய பிரதேசங்களில் உள்ள நீதிமன்ற மண்டப வளவில் சட்ட உதவிச் செயலமர்வும் கண்காட்சியும் இடம்பெறும்.
Related posts:
|
|