தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகல அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் பகிரங்க அழைப்பு!

Wednesday, October 12th, 2022

நாட்டின் தற்போதைய சவால்களை கருத்திற் கொண்டு அரசாங்கத்திற்கு அரசாங்கம் மாறுபடாத தேசிய கொள்கை ஒன்றின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

தேசிய கொள்கை ஒன்றுக்கு அமைய நாடு பயணித்தால் ஒருபோதும் தோல்வி காண வாய்ப்பு இல்லை.

போட்டிமிக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஏற்றுமதி பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான கொள்கை தற்போது வகுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு நேற்று விஜயம் செய்த போது அவர் அந்த கருத்துக்களை தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: