தேசிய காவற்றுறை ஒழுங்கு விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளது !

Monday, August 8th, 2016

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பொலிஸ் திணைக்களத்துக்கான ஒழுங்குவிதிகள் இறுதிநிலைப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் சிறி ஹெட்டிகே தெரிவித்துள்ளார்.

இந்த ஒழுங்குமுறைகள் விரைவில் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.இதன் அடிப்படையில் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் இந்த ஒழுங்கு முறைகள்பின்பற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமது ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையிலேயே இந்த ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக சிறி ஹெட்டிகே ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

Related posts: