தேசிய கலை இலக்கியப் போட்டிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
Thursday, June 13th, 2019கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் வருடாந்தம் நடத்தப்படும் தேசிய கலை இலக்கியப் போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பாலர் பிரிவு, சிறுவர் பிரிவு, சிரேஷ்ட பிரிவு, திறந்த பிரிவு (18 வயதுக்கு மேல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடத்தப்படவுள்ள இப்போட்டிகளின் கையெழுத்துப் போட்டி, கவிதைப் பாடல் போட்டி, கட்டுரைப்போட்டி, பாடல் நயத்தல் போட்டி, நாடகப்பிரதி எழுதுதல் போட்டி, பாடலாக்கப் போட்டி, நாட்டார் கலை கற்றல் போட்டி, இலக்கிய விபரணப் போட்டி, சிறுகதைப்போட்டி, சிறுவர் கதை போட்டி முதலான போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகள் தொடர்பான விபரங்களையும் நிபந்தனைகளையும் அலுவலக நேரத்தில் பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்பதுடன் ஆர்வமுடையவர்கள் 2019.06.19 ஆம் திகதிக்கு முன்னர் ஆக்கங்களை சமர்ப்பித்து மேற்படி போட்டிகளில் பங்குபற்றுமாறு பருத்தித்தறை பிரதேச செயலாளர் ஆள்வாப்பிள்ளை சிறி கேட்டுக்கொண்டுள்ளார்.
Related posts:
|
|