தேசிய கலவியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பம் – கல்வி அமைச்சு அறிவிப்பு!

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம், மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் எனவும் அவ்வமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் ஐம்பது கற்கை நெறிகளுக்காக நான்காயிரத்து 253 பேர் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர் என்றும் மாணவர்களை உள்வாங்குவதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரிகளுக்கான நேர்முக பரீட்சைக்குரிய கடிதங்கள் உரிய கல்வியியல் கல்லூரிகளினூடாக தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளது.
Related posts:
நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவித்தல்!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!
|
|